தலை வாழை இலை என்பது வாழை இலையின் நுனி பாகத்தில் இருந்து இரண்டு அடி நீளமுள்ள இலையை தலைவாழை இலை என அழைக்கப்படுகிறது…
தலைவாழை இலையில் எவ்வாறு பரிமாறுவது…
வாழை இலையை உணவு உன்ன அமர்ந்திருப்பவர் வலது கைப்பக்கம் அகலமாகவும் இடது கைப்பக்கம் வாழை இலையின் நுனிப்பகுதி இருக்குமாறு இலையைப் வைத்திட வேண்டும்.
நீரினை எடுத்து வாழை இலையின் மீது தெளித்து விட வேண்டும். அருகினில் ஒரு டம்ளர் வைத்து தண்ணீரை நிரப்ப வேண்டும்.
வாழையிலையின் நுனிப் பகுதியில் அதாவது அமர்ந்திருப்பவரை இடதுகை வாழை இலையின் மேல் பக்கம் நுனிப்பகுதியில் உப்பு வைத்திட வேண்டும்.
இனிப்பை உண்பவரின் வலதுகை வாழை இலையின் கீழ் பகுதியில் வைக்க வேண்டும். உணவு உண்பவர் வலது கைப்பக்கம் அருகினில் இனிப்பு இருப்பதினால் இனிப்பை முதலில் சுவைத்த பின்பு உணவை உண்பதை தொடங்க வேண்டும் என்றால் இனிப்பு உண்டவுடன் உமிழ்நீர் அதிகமாகச் சுரந்து உண்பவரின் செரிமானத்திற்கு உதவும்.
ரசம் சாதத்துடன் கடித்துக் கொள்ள அப்பளம் மற்றும் வடை இதை உணவு உண்பவர் இடது கை பக்கம் வாழை இலையின் நுனிி பகுதியின் கீழ் பகுதியில் வைக்க வேண்டும்.
ஊறுகாய் வாழை இலையின் அகலமான பகுதியான உண்பவரின் வலது கைப்பக்கம் இனிப்புக்கு மேலே உள்ள வாழை இலையின் மேல் பகுதியில் வைக்க வேண்டும். ( ஊறுகாயை உணவில் அதிகமாக சேர்த்து கொள்ள கூடாது என்பதற்காக உப்பின் அருகிலும் வைப்பார்கள் )
கூட்டு, பொரியல், துவையல், வடகம் போன்றவற்றை உப்பிற்கும் ஊறுகாய்க்கும் இடைப்பகுதியில் வாழை இலையின் மேல் பகுதியில் வைக்க வேண்டும்.
இப்பொழுது வாழை இலையின் நடுவே தண்டு போல் உள்ள அமைப்பிற்கு மேலே உப்பு, பொறியல் கூட்டு, ஊறுகாய்வகைகள் இருக்க வேண்டும். வாழை இலையின் நடுவில் உள்ள தண்டு இருக்கும் கீழ் பகுதியில் சமைக்கப்பட்ட அரிசி சாதத்தை சாப்பிட்டவர் வந்து அமர்ந்த பின்பு உணவைப் பரிமாற வேண்டும்.
உப்பு பருப்பு அல்லது பச்சை பயிறு மற்றும் நெய் முதலில் இட வேண்டும்.
உணவு உண்பவர் உப்பு பருப்பு உண்ட பின்பு சாம்பார் அடுத்தடுத்து ரசம், மோர் அல்லது தயிர் சாப்பாட்டிற்கு உன்ன கொடுக்க வேண்டும்.
உணவு உண்ட பின்பு கைகளைக் கழுவுவதற்கு பாத்திரத்தில் தண்ணீர் கொடுக்க வேண்டும்.
கைகளை கழுவிய பின்பு ஒரு துணியினாலான துண்டு அவர்களுக்கு கொடுக்க வேண்டும். இறுதியாக சாப்பிட்ட தயிரில் வெண்ணெய் பசலை வலுவிழப்பு கைகளில் இருக்கும் அது கையை கழுவினாலும் அகலாது அதனால் துடைத்துக்கொள்ள துண்டினை கொடுக்க வேண்டும்.
சாப்பிட்டவர் உண்ட களைப்புடன் இளைப்பாறும் பொழுது உண்ட உணவைச் செரிப்பதற்காக அவருக்கு வெற்றிலை பாக்குடன் வைக்க வேண்டும். அல்லது வாழைப்பழம் ஒன்றை வைக்கலாம்.
தமிழகம் முழுவதும் தினசரி சர்வீஸ் உண்டு
ஹோட்டல் கேட்டரிங் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு ஆர்டரின் பேரில் டோர் டெலிவரி செய்யப்படும்.